“முடிஞ்சா தப்பிச்சுக்க” நீச்சல் வீரரை விடாமல் துரத்திய ஆக்டோபஸ் ! வைரல் வீடியோ

776

ஜப்பான் கார்ரொ தீபகற்ப பகுதியில் ஆழ்கடலுக்குள் வீரர்கள் சிலர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆக்டோபஸ் ஒன்று வீரர் ஒருவரை பிடித்து இழுத்துள்ளது.

ஆனால் அந்த வீரர் தொடர்ந்து நீந்திச் சென்று கொண்டிருந்தார். ஆனாலும் ஆக்டோபசு விடாமல் நீச்சல் வீரரின் கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு மீண்டும் இழுக்க முயன்றுள்ளது.

இதையடுத்து நீச்சல் வீரர் அந்த ஆக்டோபசுவை பிளாஸ்டிக் பொருட்களால் தாக்கி தப்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஆக்டோபஸ் தனது நிறத்தை மாற்றிக்கொண்டு பாறைகளுக்குள் ஓடி ஒளிந்துள்ளது.

இந்த பெரிய ஆக்டோபஸ்கள் பசிபிக் லாஸ்கா மற்றும் ஜப்பானைச் சுற்றியுள்ள கடல் நீரில் வாழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.