எலுமிச்சை வியாபாரியிடம் இரண்டு லட்சம் பறிமுதல்.

231

ஏப்ரல் 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச்செல்பவர்கள் அதற்கு உரிய ஆவணங்களை கொண்டு வராவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது. அறிவிப்பை தொடர்ந்து பறக்கும் படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தாசில்தார் மலர்விழி தலைமையில் இன்று அதிகாலை அதிரடி சோதனையில் இறங்கினர். வாடிப்பட்டி சந்தை பாலம் அருகே கோவையில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அந்த பஸ்சில் பயணம் செய்த சங்கரன்கோவிலைச் சேர்ந்த முகைதீன்அப்பாஸ் (வயது39) ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 450 வைத்திருந்தார். அதற்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. எனவே பணத்தை பறிமுதல் செய்தனர்.

எலுமிச்சை வியாபாரியான நான் கோவையில் பணம் வசூல் செய்து வருகிறேன் என்று அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் அதிகாரிகள் அவர் கூறியதை ஏற்கவில்லை. உரிய ஆவணங்களை ஒப்படைத்து விட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்.