“யாராச்சும் டிக்கெட் எடுத்துக்கொடுங்கப்பா..” – பிகில் டிரெய்லரை பார்த்து குஷியான ரஸ்ஸல் அர்னால்டு..!

614

பிகில் திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்த முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரான ரஸ்ஸல் அர்னால்டு, விஜய்யையும் தமிழ் சினிமாவையும் அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

அதோடு யாராவது பிகில் படத்திற்கு தனக்கு 2 டக்கெட்டுகள் வாங்கித் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிகில் பட முன்னோட்டம் வெளியாகி சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. படத்தில் தளபதி ராயப்பன், மைக்கல், பிகில் என மூன்று வேடங்களில் காட்சி அளிக்கிறார்.

இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகிபாபு, கதிர், இந்துஜா, போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இப்படம் நாம் நினைத்தை விட பிரம்மாண்டமாக உள்ளதாக முன்னோட்டத்தை பார்த்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். படம் சுமார் 180 கோடியில் உருவாகி உள்ளது என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ் அர்ச்சனா ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

ரசிகர்கள் இப்படத்தின் கதை இப்படி இருக்குமா அல்லது அப்படி இருக்குமா என பல கோணங்களில், முன்னோட்டத்தை பார்த்த பின்பு தாங்களாகவே உத்தேசமாக கணித்து வருகின்றனர். இயக்குநர் அட்லி, தன்னுடைய முந்தைய எல்லா படங்களிலும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை, இறந்து விடுவது போல கதையை வடிவமைத்து இருப்பார்.

ஒருவேளை, அந்த ஃபார்முலா இந்த படத்திலும் இருக்குமானால் யார் அது என்ற கேள்வியும் ரசிகர்களின் மத்தியில் எழுப்பப்பட்டு இருக்கிறது. படத்தில் விஎஃபக்ட்ஸ் எனும் தொழில்நுட்பம் அதிகப்படியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்னோட்டம் பார்த்த பின் நமக்கே தெரிகிறது. பட முன்னோட்டத்தில் ராயப்பன் கதாபாத்திரம் சொல்லும் ஒரு வசனம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் படத்தின் முன்னோட்டத்தை பார்த்து விட்டு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரான ரஸ்ஸல் அர்னால்டு ஒரு டீவிட் செய்து இருக்கிறார்.

அதில் அவர் பிகிலே……. என்றும், டேய் மாமா எனக்கு தமிழ் சினிமாவையும் விஜய்யையும் அறிமுகம் செய்து வைத்ததுக்கு நன்றி என ஶ்ரீனி மாமா என்ற ஒருவரை டேக் செய்து இருந்தார். ராயப்பன் கதாபாத்திரம் அந்தர் மாஸ் என்றும் கூறியிருந்தார். பிகில் முன்னோட்டம் மிகவும் பிடித்தாக கூறினார். அதோடு, யாரவது தனக்கு 2 டிக்கெட்டுகள் வாங்கி தருமாறும் கேட்டு இருக்கிறார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of