ரஷ்யா செய்த கோல்மால்..! கப்புனு பிடித்த ஆணையம்..! ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை..!

1103

2020 ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி மற்றும் 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் தடை விதித்துள்ளது.

ஊக்க மருந்து சர்ச்சையில் ரஷ்யா சிக்கியதையடுத்து 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விரு போட்டிகளிலும் ரஷ்யாவின் தேசிய கீதமும், கொடியும் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஊக்க மருந்து சோதனையில் தேர்ச்சியடையும் ரஷ்ய விளையாட்டு வீரர்கள், பொதுவான கொடியுடன் போட்டிகளில் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement