ரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..? இதோ 5 காரணங்கள்..!

7621

உலகமே ஒரு பெயரை கேட்டால் தற்போது நடுநடுங்குகிறது என்றால் அது கொரோனா தான். இந்த வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாளும், வைரஸ் பரவுவது நின்ற பாடில்லை. இருப்பினும் உலக அளவில், கொரோனா பரவல் குறைவாக உள்ள நாடுகளில் ரஷ்யா 2-ஆவது இடத்தில் உள்ளது.

இது எப்படி சாத்தியமாயிற்று என்று உலகின் வல்லரசு நாடுகளே அன்னாந்து பார்க்கின்றன. அதற்கான காரணங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்..

1. சீனா உட்பட 15 நாடுகளில் மட்டும் கொரோனா பரவத் தொடங்கியதுமே, அதற்கான தடுப்பு பணிகளில் ரஷ்யா தீவிரமாக இறங்கியது. ரஷிய பிரதமர் மிக்கேல் மிசுஸ்டின், ஜனவரி 30-ந்தேதி சீனாவுடனான தனது எல்லையை மூட உத்தரவிட்டார். அன்றைய தினமே அது மூடப்பட்டு விட்டது. இது மிக முக்கிய காரணம்.

2. ரஷ்யாவின் மக்கள் பல தலைமுறை பழமையானவர்கள் என்பதாலும், போர்கள், பஞ்சங்கள் உள்ளிட்ட காரணிகளாலும், அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையிலேயே அதிகமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதுவும் கொரோனா பரவல் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

3. வெளிநிகழ்ச்சிகளுக்கு தடை, பொதுமக்கள் கூடுவதற்கு தடை, பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள் மூடல் என பல்வேறு நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே ரஷ்யா எடுத்திருந்தது.

4. ரஷ்யாவின் மிகவும் முக்கிய சுற்றுலாத்தளமான, விளாடிமிர் லெனின் நினைவிடம் அமைந்துள்ள மாஸ்கோ செஞ்சதுக்கத்தை மக்கள் பார்ப்பதற்கு ரஷ்யா அதிரடியாக தடை செய்தது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் ரஷ்யாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்று சொல்லப்படுகிறது.

5. இதுமட்டுமின்றி, ஜனவரி மாதமே இந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும், வெளிநாட்டினர் வருகையை முன்னதாகவே தடை செய்ததாலும் கொரோனா தொற்று அந்நாட்டில் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியாவும் கொரோனாவை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பது அனைவரது கருத்தாக உள்ளது.