வைரஸ் தொற்று தடுப்பூசி.. பொதுமக்களுக்கு விநியோகம்.. உற்சாகத்தில் மக்கள்..

1523

வைரஸ் தொற்றுக்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வந்தன. இதற்கிடையே, ஸ்பூட்னிக் 5 என்ற தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துவிட்டதாக, அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்தார்.

இதற்கு பலரும் கலவையான விமர்சனங்களை கூறி வந்தனர். இது மிகவும் அவசரகதியில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் ரஷ்யாவின் மீது குற்றம்சாட்டினர்.

பல்வேறு விமர்சனங்களை கடந்து, 3 கட்ட சோதனைகளை ரஷ்யாவின் ஸ்பூட்னிக் 5 தடுப்பூசி கடந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, ரஷ்யாவின் தடுப்பூசி கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து, ரஷிய சுகாதார அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலகிலேயே ரஷியாவில்தான் வைரஸ் தொற்று தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement