வருது.. வருது.. ரஷ்யாவின் அடுத்த மாஸ் அறிவிப்பு..!

2560

வைரஸ் தொற்றுக்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், அனைத்து நாட்டு விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் தீவிரமாக இயங்கி வருகின்றனர். இதற்கிடையே, கடந்த ஆகஸ்டு மாதம் ஸ்பூட்னிக் வி என்ற தடுப்பூசியை முதன்முறையாக ரஷ்யாவின் விஞ்ஞானிகளின் கண்டறிந்தனர்.

இந்த தடுப்பூசியை உலகம் முழவதும் உற்பத்தி செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், எபிவாக் கொரோனா என்ற இரண்டாவது தடுப்பூசியை ரஷ்யா பதிவு செய்ய உள்ளது.

அதாவது, வெக்டர் மையம், வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியை, அக்டோபர் 15-ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய இருப்பதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் கூறியிருக்கிறது.

இதுகுறித்து, ரஷ்யாவின் உயர்சபை சட்டமன்றத்தில் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.