ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் இரண்டு நாள் பயணமாக நாளை இந்தியா வருகை

722

ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் இரண்டு நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார்.

ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் இருந்தியா வருகையின்போது, இரு நாடுகளுக்கு இடையே 500 கோடி டாலர் மதிப்புடைய எஸ்-400 ஏவுகணை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்துப் பேசும் அவர், பிரதமருடன் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளார்.

இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளது.இதற்கான ஒப்பந்தம் ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகையின் போது கையெழுத்தாகிறது.

சுமார் 500 கோடி டாலர் மதிப்புடைய – தொலைதூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளை இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of