ஜுராசிக் பட பாணி.. 10 ஆயிரம் ஆண்டுகள்.. அழிந்த இனத்தை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி..

523

ரஷ்யாவில் சகா குடியரசில் உள்ள பனி சூழ்ந்த பகுதிகளில், 10 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பனி சிங்கக்குட்டிகளின் உடல் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த உடலை கண்டெடுத்த விஞ்ஞானிகள், இதுகுறித்து ஆராய்ச்சி நடத்தியுள்ளனர். அதன் அடிப்படையில், இந்த சிங்கக்குட்டிகளுக்கு 1 முதல் 2 வயது இருக்கலாம் என்றும், சிங்கக்குட்டிகளின் டி.என்.ஏ. தற்போதைய சிங்கங்களின் டி.என்.ஏ-ஐ ஒத்துள்ளது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, 10 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த உயிரினத்தை மீண்டும் உயிர்பிக்க முயற்சி செய்ய உள்ளதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுமட்டும் நடைபெற்றால், ஜுராசிக் பார்க் படத்தில், பல வருடங்கள் பழமை வாய்ந்த டைனோசர்கள் உயிர்பித்து வருவதைப்போன்று, இந்த பனி சிங்கக்குட்டிகளும் திரும்ப வர வாய்ப்பு இருக்கிறது.

Advertisement