குளிக்க போன இளம்பெண்… சார்ஜரில் இருந்த செல்போன்… பெண்ணுக்கு நேர்ந்த துயர சம்பவம்

554

ரஷ்யா நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள பகுதி கிராவோ-செபட்செக் அங்கு என்ஜினியா என்ற பெண் வசித்து வந்துள்ளார்.

இவருக்கு வயது 26. இவர் தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டனாக வேலை பார்த்து வந்தார். வழக்கம் போல குளிப்பதற்கு என்ஜினியா பாத்ரூமுக்குள் சென்று தண்ணீர் தொட்டிக்கு மேல் செல்போனை சார்ஜர் போட்டுவிட்டு தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினார்.அப்போது சார்ஜரில் இருந்த செல்போன் தவறி தண்ணீருக்குள் விழுந்தது மின்சாரம் தண்ணீர் முழுவதும் பரவி என்ஜினியா உடலிலும் பாய்ந்தது.

என்ஜினியா தண்ணீருக்குள் துடிதுடித்து உயிரிழந்தார். குளிக்க போன மகளை இன்னும் காணவில்லை என்று அவர் அம்மாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு சென்று பார்க்கும் போது மகள் சடலமாக கிடப்பதை கண்டு அலரி துடித்தார்.

இத்தகவலரிந்த  போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் மாஸ்கோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of