எஸ்.பி.பி உடல்நிலை குறித்து.. இயக்குனர் பாரதிராஜா சொன்னது என்ன.?

880

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் உடல்நிலை மிகவும் கவலைகிடமாக இருப்பதாக தகவல் வெளியாகிறது. இன்று காலையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியை பார்க்க அவரது உறவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மருத்துவமனைக்கு வந்தவண்ணமாய் உள்ளனர். இந்நிலையில் இன்று மருத்துவமனைக்கு வந்த இயக்குனர் பாரதிராஜா, எஸ்.பி. பாலசிப்ரமணியன் உடல்நிலை குறித்து விசாரித்து விட்டு பத்திரிக்கையாளைரை சந்தித்தார். அவர் கூறியதாவது: எஸ்.பி.பி தனது 50 ஆண்டு கல நண்பன். இன்னும் நம்பிக்கை இருக்கிறது. உலகம் முழுவதும் பலகோடி பேர் பிரார்த்தனை செய்தும் பயனில்லை. துக்கம், வருத்தத்தில் இருக்கும்போது சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது என அவர் கூறி கண்கலங்கினார்.