எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம்

883

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணி்ப்பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

பிரபல பின்னணிப்பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 5-ஆம்தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை நேற்று இரவு முதல் மோசமடைந்திருப்பதாக இன்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுவருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

74 வயதான பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடம் என்ற தகவல்,திரையுலகில் திர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.