மீண்டும் இணையத்தை தெறிக்க விட்ட விக்ரமின் `சாமி ஸ்கொயர்’

1422

ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் `சாமி ஸ்கொயர்’ படத்தின் டிரைலர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ஹரி, விக்ரம் இணைந்துள்ள படம் சாமி ஸ்கொயர். கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா நடித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிராசாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர், டிரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இதன் இரண்டாவது டிரைலர் நேற்று மாலை வெளியானது. வெளியான சிறுது நேரத்தில் யூடியுப் -ல் (Youtube) டிரெண்டிங்கின் முதல் இடத்திற்கு வந்தது.

2.08 நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலரில் ஆக்ரோஷ பேச்சும், அதிரடி சண்டை காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதில் விக்ரம் பேசிய “எனக்கு தேவை மூணு தல”.. ”நான் போலீஸ் இல்ல.. பொற்க்கி என்ற வசனக்கள் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

செப்டம்பர் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Advertisement