நான் ஆடிய பாடலால் ஸ்கிரீனை கிழித்து விட்டனர்..! கதறி அழுதேன்..! சாயா சிங் ஓபன் டாக்..!

921

நடிகர் தனுஷின் திருடா திருடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சாயா சிங். இந்த திரைப்படம் தனுஷ்-க்கும் சரி, சாயா சிங்கிற்கும் சரி, ஒரு திருப்புமுனையாக அமைந்த படம். அதுவும் அந்த திரைப்படத்தில் வரும் மன்மத ராசா பாடல் இன்றைய இளைஞர்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் ஒளித்துக்கொண்டிருக்கிறது.

அதற்கு முக்கிய காரணம் அதில் தனுஷும், சாயா சிங்கும் ஆடிய நடனம் தான் என்று கூறுகின்றனர். இந்நிலையில் சாயா சிங் அவரது கணவர் கிருஷ்ணாவுடன் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளனர்.

அதில் திருடா திருடி படம் வெளியான போது நடந்த நிகழ்வு ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது பின்வருமாறு:-

“திருடா திருடி படம் வெளியாகிய போது நான் கேரளாவில் ஒரு படத்தின் ஷுட்டிங்கில் இருந்தேன். அதனால் ஆவளுடன் படத்தின் ரிசல்ட் என்ன ஆனது என்று போன் செய்து கேட்டேன்.

அதற்கு நீ நடனமாடிய பாடலுக்கு திரையரங்கின் ஸ்கிரீனை கிழித்து விட்டதாக கூறினார்கள். இதனால் வருத்தப்பட்ட அழுதேன்.

பின்னர் தான் தெரிந்தது, மன்மத ராசா பாடலை மீண்டும் போட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் திரையரங்கில் போடாதததால், ஸ்கிரீனை கிழித்து விட்டனர். அதன்பிறகு தான் மீண்டும் மகிழ்ச்சி அடைந்தேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.