சபரிமலையில் இருந்து செய்தியாளர்கள் அனைவரும் வெளியேற உத்தரவு

487

சபரிமலையில் மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் அனைவரும் வெளியேற கேரளா போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி,கடந்த இரண்டு நாட்களாக, கோவிலுக்குள் செல்ல பெண்கள் முயன்று வருகின்றனர். ஆனால் அவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

இதனைடையே செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களும் விரட்டியடிக்கப்படுவதுடன், அவர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது.

இந்நிலையில், கேரளா போலீசாருக்கு உளவுத்துறை ரகசிய தகவல் அளித்துள்ளது.

அதில், செய்தியாளர்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து சபரிமலை, பம்பை ஆகிய பகுதிகளில் இருந்து செய்தியாளர்கள் அனைவரும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of