பங்களாதேஷ் அணியை புகழ்ந்து தள்ளிய சச்சின் – கோலி..! – ஏன் தெரியுமா?

1083

உலக கோப்பை தொடரின் 40 வது லீக் போட்டி இந்தியா – பங்களாதேஷ் அணியினர் எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 314 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.


பின்னர் விளையாடிய பங்களாதேஷ் அணி 286 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. 

பங்களதேஷ் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியது. பந்து வீச்சில் பலம் வாய்ந்த இந்திய அணி பங்களதேஷ் அணியை 250 ரன்களுக்குள் சுருட்டி விடும் என எதிர்பார்த்திருந்த இந்திய ரசிகர்களுக்கு பங்களதேச அணியின் ஆட்டம் சற்று வியப்பாகவே அமைந்தது.இந்த நிலையில் பங்களதேஷ் அணியை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.


இது குறித்து சச்சின் கூறுகையில்; நடப்பு உலககோப்பை தொடரில் பங்களதேஷ் அணி சிறப்பாக விளையாடியுள்ளது. ஒரு போட்டியில் மட்டுமல்ல; தொடர்ச்சியாக அவர்கள் தங்களது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். நான் பார்த்ததில் இது தான் பங்களதேஷ் அணி வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் என தெரிவித்துள்ளார்.

இதே போல் கேப்டன் விராத் கோலியும் பங்களதேஷ் அணியை போட்டி முடிந்த பின்னர் பாராட்டியுள்ளார். கடைசி பந்து வீசப்படும் வரை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் அவர்கள் விளையாடினர் என கோலி தெரிவித்தார்.

இந்தியாவிடம் பங்களாதேஷ் அணி தோல்வியை சந்தித்ததால் அரையிறுதிக்கான வாய்ப்பை அந்த அணி இழந்துள்ளது.

அந்த அணி ஜூலை 5 ஆம் தேதி லாட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள தனது இறுதி போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.இன்றைய நியூசிலாந்து – இங்கிலாந்து இடையேயான போட்டியை பொறுத்து பாகிஸ்தான் – பங்களதேஷ் இடையேயான போட்டி முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of