சச்சின் ஓட்டி அசத்திய பழமையான கார் ! என்ன கார் தெரியுமா ?

699

இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளில் சிறப்பு வர்ணனையாளராக இந்தியாவின் “மாஸ்டர் பிளாஸ்டர்” என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் பிரபல நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் சச்சின், தமது ஓய்வு நேரத்தில், இங்கிலாந்தின் ராயல் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் அழைப்பை ஏற்று 119 ஆண்டு பழமைவாய்ந்த பாரம்பரிய காரை ஓட்டி நகர்வலம் வந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சச்சின் நகர்வலம் வந்த அந்த கார் 119 ஆண்டுகளுக்கு முன்பு “டைம்லேர் மெர்சிடிஸ்” என்ற பிரபல கார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட “Two speed” வகையை சார்ந்த காராகும்.

அந்த காலகட்டங்களில் இது மிகவும் பிரபலமான கார் வகை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of