நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெய்ப்பூர் திரும்பிய சச்சின் பைலட்

247

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெய்ப்பூர் திரும்பிய சச்சின் பைலட், தான் கட்சிக்கும், கட்சித் தலைமைக்கு எதிராக எதுவும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை சந்தித்த சச்சின் பைலட், மீண்டும் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியுள்ளார். இதனால் ராஜஸ்தானில் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது.

மேலும் சச்சின் பைலட் எழுப்பியுள்ள பிரச்சினை குறித்து விவாதிக்க 3 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெய்ப்பூர் திரும்பிய சச்சின் பைலட்டுக்கு, அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சச்சின் பைலட், பயன்படுத்தப்பட்ட சொற்களால் தான் மிகவும் வேதனைப்படுவதாகவும், அவற்றை மறக்க நினைப்பதாகவும் கூறினார்.

அரசியலில் தனிப்பட்ட விரோத உணர்வு இருக்கக்கூடாது என்றும், பிரச்சனைகள் மற்றும் கொள்கையின் அடிப்படையில் வேலை செய்ய வேண்டும் என தெரிவித்தார். தான் கட்சிக்கும், கட்சித் தலைமைக்கு எதிராக எதுவும் பேசவில்லை என்றும், பதவிக்காக போராடவில்லை என்றும் சச்சின் பைலட் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement