இருந்த ரெண்டும் போச்சு – சச்சின் பைலட்டுக்கு வந்த சோதனை

350

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும் துணைமுதலமைச்சர் சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் முற்றியுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது முறையாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஜெயப்பூரில் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் 102 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்தக்கூட்டத்தில் முதலமைச்சருக்கு எதிராக செயல்படும் துணைமுதல்வர் சச்சின் பைலட்டை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைமுதலமைச்சர் பொறுப்பில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்படுவதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா அறிவித்துள்ளார்.

மேலும் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களாக கருதப்படும் இரண்டு அமைச்சர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.

சச்சின் பைலட்டிற்குப்பதிலாக, கோவிந்த்சிங் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சச்சின் பைலட்டிற்கு ஆதரவாக 20 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ராஜஸ்தான் மாநில காங்கிரஸிஸ் பிளவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of