சூப்பர் ஓவர் டையில் முடிந்தால் இனி இப்படி செய்யலாம்! சச்சின் சொன்ன செம ஐடியா!

1531

நடந்து முடிந்த கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது ஒன்று. ஏனென்றால், இறுதி போட்டியில் இரண்டு அணிகளும் ஒரே ரன்கள் அடித்து ஆட்டம் டையில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

அந்த ஆட்டமும் டையில் முடிந்ததால், அதிக பவுன்டரிகள் அடித்த அணியின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக ஐசிசி அறிவித்தது. இதனால் நியூசிலாந்தின் உலக்கோப்பை கனவு மண்ணோடு மண்ணாக போனது.

ஐசிசியின் இந்த அறிவிப்புக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“இனி சூப்பர் ஓவரும் டையில் முடிந்தால் பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்காமல் மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் நடத்த வேண்டும். உலகக் கோப்பையில் மட்டுமல்லாமல் அனைத்து போட்டிகளிலும் இதையே பின்பற்ற வேண்டும்.

கால்பந்து ஆட்டத்தை போலவே கிரிக்கெட்டிலும் கூடுதல் நேரம் ஒதுக்கினால் எந்த பிரச்சினையும் கிடையாது.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of