சச்சினால் தான் 37 பந்துகளில் சதம் அடித்தேன்.., அப்ரிடி உருக்கம்

640

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷாகித் அப்ரிடி. இவர் ஒருநாள் போட்டியில் 37 பந்தில் சதம் அடித்து சாதனை புரிந்து இருந்தார். 1996-ம் ஆண்டு தனது 2-வது ஒருநாள் போட்டியில் அவர் இந்த முத்திரையை பதித்தார்.

இலங்கைக்கு எதிராக நைரோபியில் நடந்த இந்த ஆட்டத்தில் அப்ரிடி 40 பந்தில் 102 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரியும், 11 சிக்சர்களும் அடங்கும். அவரின் இந்த சாதனையை கோரி ஆண்டர்சனும் (நியூசிலாந்து), டி வில்லியர்சும் (தென்ஆப்பிரிக்கா) முறியடித்தனர். 37 பந்தில் சதம் அடித்த அப்ரிடி தற்போது அதிவேக சதத்தில் 3-வது இடத்தில் உள்ளார்.

இந்த நிலையில் அப்ரிடி இந்த சாதனையை படைக்க தெண்டுல்கரின் பேட் உதவியாக இருந்த தகவல் தற்போது வெளியே தெரிய வந்துள்ளது. சச்சினின் பேட்டை பயன்படுத்திதான் சதம் அடித்தேன் என்று தனது சுயசரிதை புத்தகத்தில் அப்ரிடி இதை தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் கூறியிருந்தாவது:-

எனது சாதனை சதத்துக்கு இந்தியாவுடன் நெருங்கி தொடர்பு உள்ளது. வக்கா யூனிஸ்க்கு பிடித்தமான வீரர் தெண்டுல்கர். அவர் தெண்டுல்கரிடம் தனது விருப்பமாக பேட்டை கேட்டுள்ளார். அவரும் சியால்கோட்டுக்கு பேட்டை அனுப்பி வைத்தார்.

வக்கார் யூனிஸிடம் இருந்து தெண்டுல்கரின் பேட்டை வாங்கி நான் இந்த சாதனையை புரிந்தேன். முரளீதரன், ஜெயசூர்யா ஆகியோர் முன்னிலையில் நான் அதிரடியாக ஆடியது பெருமை அளித்தது. சூதாட்டம் தொடர்பாக நான் அணி நிர்வாகத்திடம் முன்கூட்டியே கூறி பலமுறை அணியை எச்சரிக்கை செய்தேன்.