கிரிக்கெட் உலகின் சரித்திர நாயகன் சச்சின் வரலாறு – சிறப்பு தொகுப்பு

624

இந்த பெயரை கேட்காத இந்திய நாட்டவர்கள் இருக்கமாட்டார்கள்…

ஏன் உலக அரங்கில் கிரிக்கெட்டை ரசிப்பவர்களுக்கும் இவரது பெயர் நிச்சயம் மனதில் பதிந்திருக்கும்..

கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவரின் பிறந்த தினம் தான் இன்று…

ஆம்… சச்சின் டெண்டுல்கரின் பிறந்த தினம்…

Related image

1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி மும்பையில் பிறந்த இவர் சிறு வயது முதலே கிரிக்கெட்டில் தீராத பற்று கொண்டவர்.சச்சினின் கிரிக்கெட் ஆர்வத்தை உணர்ந்த அவரின் தந்தை ஒரு கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சச்சினை சேர்த்தார்.

10 ஆம் வகுப்பு வரை பயின்ற சச்சின், கிரிக்கெட்டில் அவர் முனைவர் என்றால் அது மிகையாகாது.. அந்த அளவிற்கு உலக அளவில் சிறப்பாக விளையாடி இந்தியாவையும், இந்திய மக்களையும் பெருமைப்படுத்தியவர்.

முதன்முறையாக சச்சின் 1989ஆம் ஆண்டு தம் 16ஆவது வயதில் இந்தியாவின் சார்பாகத் தேர்வுப் போட்டிகளில் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்தத் தேர்வுத் தொடரில் ஓர் அரை சதம் எடுத்தார்.

Image result for சச்சின் டெண்டுல்கர்

24-வருடங்கள் கிரிக்கெட்டில் பயணம் செய்த சச்சின், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற மாபெரும் பெருமைக்கு சொந்தக்காரர். ஆனால், தான் முதலில் விளையாடிய 79- ஒருநாள் போட்டிகளில் அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது ஆச்சர்யம் தான்.

தனது நேர்த்தியான பேட்டிங்கின் மூலம் எதிரணியின் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ’மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின், தனது 44-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

24-ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் தனது பேட்டை பயன்படுத்தி எதிரணிக்கு பதில் சொல்லும் சச்சினுக்கு உலக அரங்கில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்து உலகை திரும்பிப் பார்க்க வைத்தார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று ஆண்டுகள் கடந்த நிலையிலும், அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சச்சின் அதிகபட்சமாக 357 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்திய அணியில் இருந்து 6 உலகக் கோப்பைகளை சந்தித்துள்ள சச்சினுக்கு, கடந்த 2011-ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. தோனி தலைமையிலான இந்திய அணியில் விளையாடிய சச்சினுக்கு அந்த ஆண்டு சிறப்பானது.

Related image

தனி நபராக பல சாதனைகளை படைத்த போதிலும், உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே சச்சினின் கனவாக இருந்து வந்தது. 2011-ம் ஆண்டு இந்திய அணி 2-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியதனால் அந்த மாபெரும் கனவு சாத்தியமானது.

Image result for சச்சின் டெண்டுல்கர் பழைய புகைப்படம்
200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 15,921 ரன்களை குவித்துள்ளார். இதில் 51 சதங்களும், 68 அரை சதங்களும் அடங்கும். இதேபோல, 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர்18,426 ரன்களை குவித்துள்ளார். இதில் 49 சதங்களும் 96 அரை சதங்களும் அடக்கம்.

விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்த அவருக்கு 1994-ம் ஆண்டு ‘அர்ஜூனா’ விருது. விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் இந்தியாவின் உயரிய விருதான “ராஜிவ் காந்தி கேல் ரத்னா” விருதும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண் உள்ளிட்ட பல விருதுகளுக்கும் சொந்தக்காரரானார். இந்தியாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னாவும் கடந்த 2014-ம் ஆண்டு சச்சினுக்கு வழங்கப்பட்டது.

Related image

இத்தகைய பல்வேறு சாதனைகள் படைத்த சச்சினுக்கு இன்று பிறந்தாள். இதனையொட்டி பல்வேறு நாட்டின் கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ளே தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், முன்னுதாரணமாக திகழும் விளையாட்டு வீரர்களில் சச்சின் டெண்டுல்கரும் ஒருவர்.

அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அவருக்கு அற்புதமானதாய் அமைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of