பிரபல பேட் தயாரிப்பு நிறுவனம்! வழக்கு தொடர்ந்த சச்சின்! இது தான் காரணமா?

706

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியைச் சேர்ந்த ஸ்பர்டான் ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் தனது பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்த ஆண்டுக்கு 10 லட்சம் டாலர் தர கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தமிட்டதாக சச்சின் தெரிவித்துள்ளார்.

ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அந்த நிறுவனம் ஒப்பந்தப்படி தொகையை தரமறுத்துவருவதாக சச்சின் தற்போது குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கோரப்பட்டதாகவும் அதற்கு பதிலளிக்க மறுத்த ஸ்பர்டான் நிறுவனம் தனது பெயர் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்டு பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்தே அந்த நிறுவனத்திற்கு எதிராக தான் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் சச்சின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of