20 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தேன் – அதை அரசு செய்திருந்தால் இந்த நிலை இருக்காது – சகாயம், IAS

3496

தண்ணீர் பிரச்சினை குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் வெளியிட்ட அறிக்கையை, அரசு பின்பற்றி இருந்தால் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டிருக்காது என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த தாழம்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே தான் வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டினார்.

ஏரிகளை ஒரு மீட்டர் ஆழம் தூர்வாரி மழை நீரை சேமித்து வைத்தால் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டிருக்காது என்று அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்ததாகவும், அதனை அரசு செய்யும் என்று நம்புவதாகவும் சகாயம் தெரிவித்தார்.

மும்மொழி கொள்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், தாய்மொழி கல்வியே சிறந்தது என்றும் முன்னேறிய பல்வேறு நாடுகளில் தாய்மொழியை தான் தங்களது பிள்ளைகளுக்கு கற்பிக்கப்படுவதாக கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of