போட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika

486

2006ம் ஆண்டு வெளியான மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. 2019ம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் திரையுலகில் இருந்தாலும் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான பரதேசி திரைப்படம் பெரிய அளவில் இவருக்கு பெயர் பெற்றுத்தந்தது. கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் மகளாய் தோன்றியது இவர் திரையுல வாழ்க்கையில் மறக்கமுடியாத படமாக அவருக்கு அமைந்தது.

2013ம் ஆண்டு வெளியான பரதேசி படத்திற்காகவும், 2016ம் ஆண்டு வெளியான கபாலி படத்திற்காகவும் சாய் தன்ஷிகாவிற்கு Film Fare வழங்கும் Best Supporting Actress விருதுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் படம் இல்லாமல் போனாலும், இந்த 2020ம் ஆண்டு நான்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இதில் கிட்னா என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று நான்கு மொழிகளில் வெளிவர உள்ளது.

தற்போது பொங்கல் விழாவினை முன்னிட்டு சாய் தன்ஷிகா தனது போட்டோ ஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

photo-shoot-4

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of