படம் தோல்வியால் சம்பள பணத்தை விட்டு கொடுத்த சாய் பல்லவி

1829
சாய் பல்லவி மலையாளத்தில் அறிமுகமாகி, பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ரெளவுண்டு கட்டி நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘மாரி 2’ படத்தில் சாய் பல்லவியின் மாறுபட்ட நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றது. அந்த படத்தில் உள்ள ‘ரெளவுடி பேபி’ பாடலில் இவரின் ஆட்டம் ரசிகர்களை துள்ளி குதிக்க செய்தது. அந்த பாடல் மிகப்பெரிய டிரெண்ட் ஆனது.
இந்த நிலையில் தெலுங்கில் ஹனுராகவபுடி இயக்கத்தில் ஷர்வானத் – சாய்பல்லவி நடித்த ‘படி படி லேச்சு மனசு’ என்ற தெலுங்கு படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படத்துக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை.
அதனால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. படத்துக்கு சாய்பல்லவிக்கு பேசிய சம்பளத்தில் மீதி தொகை ரூ.40 லட்சத்தை படம் ரிலீசான பிறகு தருவதாக சாய் பல்லவியிடம் தயாரிப்பாளர் வாக்குறுதி அளித்து இருந்தார். தற்போது ரூ.40 லட்சத்தை கொடுக்க அவர் முன்வந்தபோது சாய்பல்லவி வாங்க மறுத்துவிட்டார். இதனால் தெலுங்கு திரை உலகினர் சாய்பல்லவியை பாராட்டுகிறார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of