
வா குவாட்டர் கட்டிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காளி வெங்கட்.
இதையடுத்து, வெளியான முண்டாசுப்பட்டி, இறுதிச்சுற்று திரைப்படங்களின் மூலம் பிரபலமான இவர், பல்வேறு திரைப்படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், காளி வெங்கட் நடிக்க உள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு, நடிகை சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.