“டியர் காம்ரேட்” பட கதை கேட்டு ஷாக் ஆன சாய்பல்லவி..! – நடிக்க மறுத்த காரணம் இதுதானாம்..!

1355

தியா படத்தையடுத்து ‘மாரி 2’ படத்தில் நடித்த சாய்பல்லவி யாரும் எதிர்பாராத வகையில் தனுஷுடன் ‘ரவுடி பேபி’ பாடலுக்கு குத்தாட்டம்போட்டு அசத்தினார். அடுத்து சூர்யாவுடன் நடித்த ‘என்ஜிகே’ படத்தில் நெகடிவ் வேடம் ஏற்றிருந்தார்.

வேடங்களில் வெரெய்ட்டி, நடனத்தில் சேலன்ஞ் என எந்தவித சவால் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கும் சாய்பல்லவி கவர்ச்சி காட்டும் விஷயத்திலும், முத்தம் தரும் காட்சிகளிலும் ரொம்பவே கறார் காட்டுகிறார். குறிப்பாக லிப் டு லிப் காட்சியில் நடிக்க வேண்டுமென்றால் அந்த படமே வேண்டாம் என்று நடையை கட்டிவிடுகிறார்.

விஜய் தேவரகொண்டா நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த டியர் காம்ரேட் படத்தில் ஹீரோயினாக நடிக்க சாய்பல்லவியை அணுகினார் இயக்குனர். ஒன் லைன் கதை கேட்டு பிடித்திருந்தநிலையில் காட்சிகள்பற்றி கேட்டார்.

அப்போது படத்தில் இடம்பெறும் முக்கிய காட்சிகள் பற்றி கூறியதுடன் மழையில் நனைந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவுக்கு லிப் டு லிப் கிஸ் தரவேண்டும் என்றார் இயக்குனர்.

அதைக் கேட்டு ஷாக் ஆனவர், என்னது லிப் டு லிப் தரணுமா என்று அதிர்ச்சியானார். லிப் டு லிப் கிஸ் தருவதிலோ, ஓவர் கிளாமர் காட்டி நடிப்பதிலோ எனக்கு இஷ்டம் இல்லை, படத்திற்கு வேறு ஹீரோயினை தேர்வு செய்துகொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டார்.

பின்னர் ராஷ்மிகா மன்டன்னாவிடம் படத்தில் நடிக்க கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டார். லிப் டு லிப் முத்த காட்சிகளிலும் நெருக்கமாக நடித்தார்.

Advertisement