“நான் தான் பெயர் வைப்பேன்..” மனைவியிடம் ஏற்பட்ட தகராறு..! காவலர் தற்கொலை..!

427

சென்னை தேனாம்பேட்டை போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்த வைரமுத்து என்பவர், சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு அமலாபுஷ்பம் என்ற மனைவியும், பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு பணி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வைரமுத்து, தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, தூக்கில் தொங்கிய நிலையில், வைரமுத்து உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், குழந்தைக்கு பெயர் வைப்பதில் மனைவியிடம் ஏற்பட்ட தகராறின் காரணமாக ரைவமுத்து உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of