“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..!

2160

மீண்டு வா..! மீடேறி வா..!

நடுக்காட்டுப்பட்டியில
பிறந்தவனே!
நாடெல்லாம் உன் பெயரை
நாத முழக்கமாக்கியவனே! 

மூணு நாளா நித்திரையில்
நிறுத்திவச்சு,
உன் மூச்சு புதை குழியில்
தவிக்குதப்பா!

முந்தானையில் முகம் மூடி
உன்ன பாதுகாத்தவ,
வைக்கப்போர்ல பொத்திவைத்த
போர்வெல்ல பார்க்க
மறந்துட்டாளப்பா..!

அம்மாவுக்கு ‘சரி’னு
சொன்னவனே!
அகிலமே அழுகுதப்பா
உன் குரல் கேட்க,
‘அழுவாதிங்க’ னு சொல்ல
உன் குரல உசத்தப்பா..!

உன் தாயி
உன்னை பிரசவித்த
பிரசவ வலி
கண் விழியில்
கதறி கதறி வழியுதப்பா..!

ஓடி விளையாண்டவனே;
சிரித்து சிரித்து
எங்களை சிலாகித்தவனே;
மூக்குல முத்தமிட்டவனே;
முகத்தை மிதிச்சு ஓடியவனே;
ஒழிந்து விளையாடத்தப்பா;
உன்னை பிடிக்க
ஓடோடி வந்திருக்காக;
ராட்சச இயந்திரம் பொருத்திருக்காக;
மழையை நிறுத்த சொல்லிருக்காக;
மந்திரிகளும் உன்ன பார்க்க
அனுமதி கேட்டுருக்காக;
உந்தி தள்ளி மேலேறி வாப்பா..!

தொப்புள் கொடி தறித்தவனே!
உனக்கெதற்கு முழங்கயிறு(?)
தொப்புள் கிழிய கதறுறாப்பா
மீடேறி மேலேறுப்பா..!

புதிய இந்தியாவில் பிறந்தவனே!
விங்ஞாணம் விரைத்துப்போச்சு;
அறிவியல் அழிந்து போச்சு;
தொழில் நுட்பம் தொலைந்து போச்சு;
உன் மூச்சு எங்களுக்குள்
உறஞ்சு போச்சு;
உலகமே கண்ணீரில்
மிதந்து போச்சு;
உன் முகத்தை காணத்தான்..!

எப்பா… சுஜித்…
உன் பாதம் முத்தமிட
உசுறு துடிக்குதப்பா,
பூகம்பம் கிளப்பி
வந்துவிடு,
மகனே
மீடேறி வந்துவிடு
மீண்டு வந்துவிடு…

  • கவிஞர் சாக்லா

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of