“அவ எனக்கு தான்..” கூட்டாளியின் காதலிக்காக கொலை..! விசாரணையில் வெளியான பகீர் தகவல்..

355

நெல்லை மாவட்டம் பாளையங்ககோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டி. 40 வயதாகும் இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். மேலும், இவர் மீது பல்வேறு கார் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் போலீசார் ராஜபாண்டியை பிடிக்க முடிவு செய்து, தங்களது விசாரணையை தொடங்கினர்.

அதில், தனக்கு துப்புக்கொடுக்கும் பெண் ஒருவருடனும், ராஜபாண்டி தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பெண்ணை சந்தித்த போலீசார், ராஜபாண்டியன் குறித்து விசாரித்தனர்.

அவன் தன்னுடைய மகனின் காதலி சித்ராவுடன் புதியம்புத்தூரில் வசித்து வருவதாக துப்புக்கொடுக்கும் பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.  இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், சித்ராவை கண்டு பிடித்து அவரிடம் உரிய முறையில் விசாரணையை துவங்கினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

தனது புதிய காதலியை புதியம்புத்தூருக்கு ராஜபாண்டி அழைத்து சென்று குடித்தனம் நடத்தி வந்துள்ளார். அப்போது, ராஜபாண்டியன் கூட்டாளிகள் ராமர், முத்துக்கனி மற்றும் சக்திவேல் ஆகிய 3 பேர் அடிக்கடி வீட்டிற்கு வருவது வழக்கம். இதில், சக்திவேல் என்பவர் 22 வயது இளைஞன். இவரைப்பார்த்த சித்ரா, சக்திவேலை காதல் வலையில் சிக்க வைத்து, அங்கிருந்து தப்பித்து விட வேண்டும் என்று முயற்சித்துள்ளார்.

இந்த விஷயம் ராஜபாண்டிக்கு தெரிய வரவே, அவர் சித்ராவை கடுமையாக தாக்கி, தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனை பொறுத்துக்கொள்ளாத சித்ரா, சக்திவேலிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று, ராஜபாண்டி வீட்டிற்கு சக்திவேல் உட்பட கூட்டாளிகள் 3 பேரும் வந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில், ராஜபாண்டி தலை தனி, உடல் தனியாக வெட்டி வீசப்பட்டார்.

இதையடுத்து உடலை அப்புறப்படுத்திய அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டப்படி, அமைதியாக வசித்து வந்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், அனைத்தும் அம்பலப்படுத்தப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர், 3 பேரை கைது செய்துள்ள நிலையில் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.