ரசிகர்களின் அட்டகாசமே முதலீடு.. ரூ.100 கோடி முதல் சம்பளம் பெறும் நடிகர்கள்..!

1383

தனது விருப்பமான நடிகர்களின் திரைப்படம் வெளியானால், அன்று திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். பட்டாசு வெடித்து, மிகப்பெரிய திரையரங்கத்தை அமர்க்களம் செய்துவிடுகிறார்கள்.

ஆனால், இதை வைத்து தான் ஹீரோக்கள் தங்களது சம்பளத்தை நிர்ணயிக்கிறார்களாம். தற்போது நடிகர்களின் சம்பளம் தொடர்பாக திரைத்துறையினர் கூறிய தகவலை பார்க்கலாம்..

அந்த தகவலின் படி,

1. நடிகர் ரஜினிகாந்த் ஜி.எஸ்.டி-யோடு சேர்த்து ரூ.105 கோடி சம்பளம் பெறுகிறாராம்.

2. நடிகர் விஜய் 80 கோடி ரூபாயும், அஜித் 55 கோடி ரூபாயும் சம்பளம் வாங்குகிறார்களாம்.

3. நடிகர் சூர்யா ஒரு படத்திற்கு ரூ.30 கோடி வரை சம்பளம் பெறுகிறாராம்.

4. விக்ரம் மற்றும் தனுஷ் 15 கோடி ரூபாயும், விஜய்சேதுபதி 10 முதல் 15 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள்.

5. நடிகர் கமல் பெரும்பாலும் சொந்த நிறுவனத்திலேயே நடித்து வந்தாளும், மற்ற நிறுவன படங்களுக்கு 25 கோடி ரூபாயை சம்பளமாக பெறுகிறாராம்.

6. நடிகைகளை பொறுத்த அளவில், நயன்தாரா மட்டுமே 4 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம். மற்ற நடிகைகள் அனைவரும் ரூ.1 கோடி வரை தான் சம்பளம் பெறுகிறார்களாம்.

நடிக்க ஆரம்பிக்கும் தொடக்கத்தில் லட்சங்களில் சம்பளம் பெறுபவர்கள், தங்களுக்கான ஓபனிங் அதிகரிக்கும்போது படிப்படியாக சம்பளத்தை அதிகரித்து, கோடிக்கணக்கில் சம்பளத்தை வாங்குகிறார்கள்.

இந்த லாக்டவுன் நேரத்திலும் அவர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு திரைத்துறையில் இருக்கிறது. இந்த குற்றச்சாட்டை பொய்யாக்கி சம்பளத்தை குறைப்பார்கள..? அல்லது அதனை ஏற்றுக்கொண்டு சம்பளத்தை குறைக்காமல் இருப்பார்களா..? என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

Advertisement