கைதிகள் ஊதியத்தில் 50% பிடித்தம் சட்ட விரோதம் – மதுரை உயர்நீதிமன்றம்

373

கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பணம் பிடித்தம் செய்ய வழிவகை செய்யும் தமிழ்நாடு சிறை விதி 481 அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, சிறை கைதிகளின் ஊதியத்தில் 50 சதவிகிதம் பணம் பிடித்தம் செய்வது நியாயமானதாக இல்லை என தெரிவித்தனர்.

எனவே, கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவிகிதம் பணம் பிடித்தம் செய்ய வழி வகை செய்யும் தமிழ்நாடு சிறை விதி 481 அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என நீதிபதிகள் அறிவித்தனர்.

மேலும் உணவு, உடைக்காக நியாயமான முறையில் குறைந்த தொகையை பிடித்தம் செய்ய தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டனர்.