பேருந்து மோதி இளைஞர் பலி – பேருந்துக்கு தீ வைத்த உறவினர்கள்

766

சேலம் அருகே, தனியார் பேருந்து மோதி இளைஞர் உயிரிழந்த ஆத்திரத்தில் பேருந்துக்கு இளைஞரின் உறவினர்கள் தீவைத்தனர்.

சேலம் கோவில்காடு பகுதியை சேர்ந்த இளையராஜா என்ற இளைஞர் கூலி வேலை செய்து வந்தார். இன்று மாலை இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இவர் சாலையை கடக்கும் போது, வேகமாக வந்த தனியார் பேருந்து இளையராஜா மீது மோதியது.

அப்போது உயிரிழந்த இளைஞரின் உறவினர் பேருந்திற்கு தீவைத்ததாக கூறப்படுகிறது.

விபத்திற்காக பேருந்து பயணிகள் கீழே இறங்கியிருந்ததால், உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அனைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement