காணாமல் போன இளம் பெண் பிணமாக மீட்பு.. கொலையா? தற்கொலையா?

190

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்ற கூலிதொழிலாளியின் மகள் சினேகாவை.

இவர் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்று தேடப்பட்டு வந்த நிலையில், அவர் வீட்டின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் சடலமாக இருந்ததை பார்த்த போது மக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பிரசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய காவல் துறையினருக்கு திடுக்கிடும் தகவல் கிடைந்தது. இவர் திருமணம் ஆகாமல் கர்ப்பமாக இருந்தது பிரேத பரிசோதனையில் உறுதி செய்ப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.