குழந்தை பிறந்ததும் மனநிலை பாதிப்பு..! பழைய நிலைக்கு மாறியதும் கதறிய இளம்பெண்..! காரணம் பெற்றோர்..!

419

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள நைனாம்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கும், மீனா என்ற பெண்ணிற்கும் இடையே 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால், திருப்பூருக்கு சென்று, அங்குள்ள பனியன் கம்பெணியில் இருவரும் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கர்பம் அடைந்த மீனாவுக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

குழந்தை பிறந்ததும் மனநிலை பாதிக்கப்பட்டு, உடல்நிலை மிகவும் மோசமடைந்த மீனாவை, சேலம் அழைத்து வந்த அவரது பெற்றோர், தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்து சிகிச்சைக்கு அளித்து வந்தனர்.

மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியதும், தன் குழந்தையை மீனா கேட்டதற்கு, சென்னையை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்து விட்டதாக தெரியவந்தது. இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மீனா, தனது குழந்தையை மீட்க தொடர்ந்து போராடி வருகிறார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்த மீனா, தனது பெற்றோரை விசாரித்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்றும் தெரிவித்திருக்கிறார்.