நீதிமன்றமே சொன்னாலும் 8 வழிச்சாலை வருவது உறுதி – பொன்.ராதாகிருஷ்ணன்

907

யார் தடுத்தாலும், கண்டிப்பாக 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

நேற்று சேலத்தில் பேசிய பாஜக அமைச்சர் நிதின் கட்கரி தனது பிரச்சாரத்தில், சேலம் 8 வழி சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

நீதிமன்ற தீர்ப்பு வந்தாலும், மக்களிடம் திட்டம் குறித்து பேசுவோம். மக்களிடம் பேசி திட்டத்தை கண்டிப்பாக செயல்படுத்துவோம்.

விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு கண்டிப்பாக வழங்கப்படும், என்றார். இதுகுறித்து தற்போது பாஜக இணையமைச்சரும் கன்னியாகுமரி வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன் தனது பிரச்சாரத்தில், காங்கிரஸ் கட்சி எப்போதும் பாஜகவிற்கு எதிராக பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறது. பாஜக செய்த நலத்திட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கடுமையான பொய் பிரச்சாரங்களை செய்து வருகிறது.

மோடி பொய் பேசுவதாக குஷ்பு கூறுகிறார். ஆனால் மோடி என்ன பேசினார் என்பதை குஷ்பு கூறவில்லை. கன்னியாகுமரி எப்படி மோடி கன்னியாகுமரி தொகுதியில் மக்களுக்கு நிறைய செய்து இருக்கிறார். இங்குள்ள வாக்காளர்களுக்கு அது தெரியும்.

இம்மாவட்டத்தில் நடந்த வளர்ச்சி திட்டங்கள் மக்களுக்கு தெரியும். வளர்ச்சியை சந்தித்த மக்களே அதற்காக வாக்களிப்பார்கள்.

சேலம் சாலை சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் உறுதியான வளர்ச்சி திட்டம். அந்த திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

தற்போது ஒரு சிலரின் தூண்டுதல் பேரில் தடை வந்துள்ளது. இது தற்காலிக தடை மட்டும்தான். வளர்ச்சி எப்படி வளர்ச்சி திட்டங்களை யாரும் தடுக்க கூடாது.

மக்களின் ஆதரவு இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக அந்த திட்டம் நிறைவேற்றப்படும்.

8 வழி சாலை திட்டத்தை யார் நினைத்தாலும் கண்டிப்பாக தடுக்க முடியாது என்று பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டு இருக்கிறார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of