சேலத்தில் நடந்த கொடூரம் – குடிபோதையில் கணவன் செய்த வெறிச்செயல்!

982

சேலம் அருகே குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வேட்டைக்காரன்புதூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாலசுப்ரமணி, தினமும் குடித்துவிட்டு மனைவி தங்கமணியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால், அவர் தமது தாய் வீட்டிற்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

அங்கு வந்த பாலசுப்ரமணி, வீட்டிற்கு வருமாறு தங்கமணியை கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு தங்கமணி மறுத்ததை அடுத்து, குடிபோதையில் இருந்த பாலசுப்பிரமணி, தங்கமணியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் இருந்த தங்கமணியை மீட்ட அப்பகுதி மக்கள், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எனினும், அவர் செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த கொலை குறித்து மல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of