“வட போச்சே..” செல்ஃபி எடுத்த ரசிகர்..! செல்போனை பிடிங்கிய சல்மான் கான்..!

488

சமீபத்தில் நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார், ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்கும்போது, அந்த செல்போனை கீழே தள்ளிவிட்டார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பியது.

இந்நிலையில் இதற்கு இணையாக பாலிவுட்டிலும் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. கோவா மாநிலத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் படப்பிடிப்புக்கு சென்றிருக்கிறார்.

விமான நிலையத்தில் சல்மான் கானை கண்ட ரசிகர் செல்போனில் செல்ஃபி எடுக்க முயன்றிருக்கிறார். இதனைக்கண்ட சல்மான் கான், அந்த செல்போனை பறித்து சென்றுவிட்டார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைகண்ட நெட்டிசன்கள், சல்மான் கானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of