தேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U Turn

1067

உச்சத்தில் இருக்கும் சில தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் நடிக்க அதிக நாட்டம் காட்டுவதில்லை. அதற்கு காரணமாக பல விஷயங்களை கூறுகின்றனர். இந்த பட்டியலில் முதலில் இருப்பவர் அனுஷ்கா. நான் தென்னிந்திய நடிகை என்ற அந்த பெயரே எனக்கு போதுமென்று அவர் கூறிவருகிறார்.

இந்நிலையில் அந்த பட்டியலில் இணைந்துள்ளார் சமந்தா, அண்மையில் தன்னை தேடிவந்த ஒரு ஹிந்தி பட வாய்ப்பை அவர் மறுத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் சமந்தா நடித்து வெளியான படம் யு-டர்ன். இதை இந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்து அதிலும் சமந்தாவையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியபோது, ஏற்கனவே நடித்த வேடத்தில் மீண்டும் நடிக்க விரும்பவில்லை என்று மறுத்து விட்டாராம் சமந்தா.

அதனால் சமந்தாவின் வேடத்தில் நடிக்க இப்போது டாப்சியிடம் பேசி வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of