சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு – அப்ரூவரான பயங்கரவாதியை விடுதலை செய்த நீதிமன்றம்

571

ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தில், சம்ஜௌதா விரைவு ரயிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 68 பேர் உயிரிழந்தனர்.

2007ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. உயிரிழந்தவர்களில் 16 குழந்தைகள் உட்பட 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் மீது தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டாளர் சாமியார் அசீமனந்தா, லோகேஷ் சர்மா, கமல் சவுகான், ராஜிந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதில் சுனில் ஜோஷி என்ற முக்கிய குற்றவாளியை துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்டார்.

ஆனால், அப்பாவிகளை கைது செய்து சிறையில் அடைக்கும் என்.ஐ.ஏ ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த வழக்கை விசாரிக்காமல் காலம் தாழ்த்தியதாக இந்தியா முழுவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில்  ஆதாரங்கள் இல்லை எனக்கூறி நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.

இந்த வழக்கில் என்.ஐ.ஏ போலீசார் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறிவிட்டதாக  நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதில் சாமியார் அசீமனந்தாசம்ஜோதா குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக அப்ரூவர் ஆனவர். தான் குண்டு வைத்ததை ஒப்புக்கொண்ட அசிமானந்தா உட்பட ஆர்.எஸ்.எஸ்.ஐ சேர்ந்த 4 பேரை விடுதலை செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of