வெற்றிமாறனின் சங்கத்தலைவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

865

இயக்குநர் வெற்றிமாறனின் நெருங்கிய நண்பர் இயக்குநர் மணிமாறன். இவர், ஏற்கனவே, உதயம் என்.எச் 4 என்ற திரைப்படத்தை இயக்கியிருந்த நிலையில், சங்கத்தலைவன் என்ற இன்னொரு இயக்கி முடித்துள்ளார்.

நடிகர் சமுத்திரகனி ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில், விஜே ரம்யா ஹீரோயினாக நடித்துள்ளார்.

வெற்றிமாறன் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நீண்ட நாட்களுக்கு முன்னரே முடிந்துள்ள நிலையில், தற்போது இந்த படம் வரும் 26-ஆம் தேதி அன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தறி தொழில் மற்றும் கைத்தறி தொழிலாளர்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

Advertisement