“உங்களுக்கு பிடிக்காதது என்ன?” – கங்குலி ஃபோட்டோவிற்கு கமெண்ட் போட்டு தெறிக்கவிட்ட சனா கங்குலி..!

1492

இந்திய கிரிக்கெட் அணியில் வீரராக இருந்து தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட் அணியின் தாதா என்று அழைக்கப்பட்டவர் சவுரவ் கங்குலி. அவர் சமீபத்தில் பிசிசிஐயின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

மேலும் அவர் இந்தியா மற்றும் வங்காள தேச பகலிரவு டெஸ்ட் போட்டியை கொல்காத்தாவில் நடத்தினார். மேலும் அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது எடுத்து கொண்ட புகைப்படத்தை சவுரவ் கங்குலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

இந்நிலையில் கங்குலியின் இந்த பதிவில் அவரது மகள் சனா நீங்கள் விரும்பாதது என்ன என்று பதிவிட்டிருந்தார். அதற்கு கங்குலி உன்னுடைய கீழ்படியாமை தான் என்று பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லாம் உங்களிடமிருந்து கற்றுக் கொண்டதுதான் என்று கிண்டலாக கூறியுள்ளார். இதனை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of