சண்டைகோழி-2 திரைப்படம் வெளியான திரையரங்கம் வெறிச்சோடியது

1602

திருச்சியில் சண்டைகோழி-2 திரைப்படம் வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் வராததால் திரையரங்கம் வெறிச்சோடியது.

திருச்சி – தஞ்சை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று செய்தியாளர்களிடம் சந்திப்பில் போது திருட்டு வி.சி.டி. எடுக்க உதவியதாக கூறி தடை விதிக்கப்பட்ட 10 திரையரங்குகளுக்கு திரைப்படங்களை தொடர்ந்து வழங்க சம்மதித்தால் தான் விஷால் படத்தை திரையிட முடியும் என்று தெரிவித்திருந்தனர்.

பின்னர் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியதில், சமரசம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இருந்த போதும், திருச்சியில் வெளிவந்த நாளிதழ்களில் திரையரங்க உரிமையாளர்களின் பேட்டியை மேற்கோள் சண்டக்கோழி 2 படம் இன்று வெளியாகாது என்றே செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் அந்த படம் திருச்சி திரையரங்குகளலில் வெளியானது. ஆனால் ரசிகர்கள் வராத காரணத்தினால் திரையரங்கம் வெறிச்சோடி காணப்பட்டது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் நேற்று அளித்த பேட்டியை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு எடுத்த முடிவுகளை வெளிப்படையாக தெரிவிக்காததே காரணம் என்று கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of