“மச்சினிச்சி வந்திருந்தா நல்லா இருக்கும்” – மாமியார் சொன்ன வார்த்தையால் கதறியழுத சாண்டி..!

3139

தன்னை பற்றி தனது மாமியார் கூறிய வார்த்தைகளை கேட்டு சாண்டி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். பிக் பாஸ் மேடையில் தனது மாமியாரின் பேச்சைக் கேட்டு சாண்டி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தார் ஒவ்வொருத்தராக வந்து சென்றனர். விருந்தினர்கள் வந்தது ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதமாக நெகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், எதிர்பார்த்த சிலர் வராதது போட்டியாளர்களுக்கு ஏமாற்றத்தையே தந்தது.

அது தொடர்பாக நேற்று பேசிய கமல், வேறு யாரை சந்திக்க ஆசைப்பட்டீர்கள் என போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். அப்போது ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது எதிர்பார்ப்பைச் சொன்னார்கள்.

ஏற்கனவே கடந்த வாரம் முழுவதும் சாந்தசொரூபியாக வலம் வந்த வனிதா, நேற்றும் தன் மகனை எதிர்பார்த்ததாகக் கூறி அழுதது பார்க்க பாவமாக இருந்தது. கமல் கூறியது போல், அவரது சண்டைக்கோழி குணத்தை எல்லாம் தாண்டி, இக்காட்சிகள் அவரது தாய்மையையும், ஏக்கத்தையும் வெளிக்காட்டுவதாக இருந்தது.


இதேபோல், சாண்டி பேசுகையில் கிண்டலாக மச்சினிச்சி வந்திருந்தா நல்லாயிருக்கும் சார் என சிரித்துக் கொண்டே கூறினார். சாண்டி விளையாட்டுக்குத் தான் கூறுகிறார் என நினைத்தால், நிஜமாகவே இன்று அவரது மச்சினிச்சியையும் மேடையேற்றி விட்டார் பிக் பாஸ். கூடவே மாமியாரும்.


சாண்டி பற்றி கமல் முன்னிலையில் பேசிய அவரது மாமியார், ‘இதுவரை சாண்டியை மாப்பிள்ளை என்றே அழைத்ததில்லை. அவரும் தனக்கு ஒரு மகன் தான்’ என நெகிழ்ச்சியாகக் கூறினார். கூடவே ‘ஜெயிச்சுட்டு வாங்க மாப்பிள்ள’ என்றார் அவர். இதனை அகம் டிவி வழியே பார்த்த சாண்டி கண்ணீர் விட்டு அழுதார்.

இன்றைய புரொமோவில் வெளியாகி இருக்கும் இந்த வீடியோவைப் பார்க்கும் போது, நேற்று மற்ற போட்டியாளர்கள் கூறியது போல் அவர்களது ஆசையையும் பிக் பாஸ் நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக வனிதாவின் ஆசையை நிறைவேற்றுவாரா என்பது தான் பலரது ஆர்வமாக உள்ளது.


இதுவரை தன் பெயரைக் கெடுத்துக் கொண்டாலும்கூட, பிக் பாஸ் எதிர்பார்த்ததைவிட அதிக கண்டெண்டுகளைக் கொடுத்து திணறடித்து விட்டார் வனிதா. எனவே, அவரை வீட்டை விட்டு வெளியேற்றும் முன், மகனை அழைத்து வந்து ஆசையை நிறைவேற்றி வையுங்கள் பிக் பாஸ் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.