தோனி, சச்சின் அடுத்து பாலிவுட்டில் களமிறங்கும் சானியா மிர்சா

278

பலரின் கனவுக்கன்னியாக விளங்கிய முன்னால் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிரசா தன்னுடைய அதிரடி ஆட்டத்தாலும், அழகிய சிரிப்பாலும் ரசிகர்கள் மத்தியில் என்று தனக்கென அழியா இடம்பிடித்தவர்.

இவரின் பெயர் என்றும் மக்கள் மனதில் அழியாது என்பதில் எந்த ஒரு அய்யமுமில்லை, அதுமட்டுமின்றி, எப்போதும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதையடுத்து, பாலிவுட் தற்போது விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க ஆர்வம் காட்டிவருகிறது.

தோனி, சச்சின் இந்த பட்டியலில் தற்போது பிரபல சானிய மிர்சாவும் இணையவுள்ளார்.

சானிய மிர்சா குறித்த வாழ்க்கை வரலாற்று திரைப்படம் உருவாகவுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனை பாலிவுட் இயக்குநர் ரோனி ஸ்குருவாலா இயக்கவுள்ளாகவும், இதில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த படத்தில் சானிய மிர்சாவுடைய சிறு வயது வாழ்க்கை, டென்னிஸில் முன்னேறுவதற்காக செய்த போராட்டங்கள் என முக்கிய பகுதிகளை படமாக்கப்படவுள்ளது.

மேலும், இதைப்பற்றி சானிய மிர்சா கூறுகையில், என்னுடைய பயணம் குறித்த படத்தை பெரிய திரையில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், என்னுடைய வாழ்க்கை வரலாற்றை சரியான இயக்குநர் படமாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.