கிரிக்கெட்டுடன் சேரும் டென்னிஸ் விரைவில் டும்… டும்… சத்தம்!

184

நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் தங்கை அனமுக்கும், இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டனான அசாருதீனின் மகன் ஆசாத்துக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆசாத்துடன் இருக்கும் புகைப்படத்தை ‘குடும்பம்’ என்ற அடைமொழியுடன் சானியா மிர்சா பதிவிட்டுள்ளார்.ஆசாத்-அனம் ஆகிய இருவரின் திருமணம் குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், சானியா மிர்சாவின் இந்தப் பதிவு திருமணம் உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் ஆசாத், கடந்த பிப்ரவரியில் சானியா மிர்சா மற்றும் அவரது சகோதரி அனமுடன் இருக்கும் படத்தை வெளியிட்டிருந்தார்.

சானியா மிர்சாவின் தங்கை அனமுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று விவாகரத்தானது.