தொடரும் வெற்றி – அரையிறுதியில் சானியா மிர்சா ஜோடி

408

மகேப்பேறு காரணமாக சில ஆண்டுகளாக களமிறங்காமல் இருந்த இந்திய நட்சத்திர டென்னிஸ் ஆட்டக்காரர் சானியா மிர்சா தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றார். பலரும் இந்த போட்டியின் மூலம் மிர்சா புதுபிரவேசம் எடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெறும் இந்த போட்டிகளில், இந்திய வீராங்கனை சானியா, உக்ரைன் வீராங்கனையான நாடியா கிச்செனோக்குடன் இணைந்து சிறப்பாக விளையாடி வருகிறார். லீக் போட்டிகளை எளிதாக வென்ற சானியா மிர்சா ஜோடி, கால் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் வானியா கிங்-கிறிஸ்டினா மெக்ஹாலே ஜோடியை சானியா ஜோடி எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அமெரிக்க ஜோடியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது சானியா மிர்சா ஜோடி.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of