சென்னையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகளில் மருந்து தெளிப்பு

74

தமிழகம் முழுவதும் தீயணைப்புத்துறையினர் சுகாதாரத்துறையினர், மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து கொரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன் ஒருகட்டமாக, சென்னையில் 50 க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.

இதையொட்டி, சென்னை பாரிமுனைப்பகுதியில் இருந்து மண்ணடி, பெரியமேடு, தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீயணைப்புத்துறை வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

தீயணைப்புத்துறையினர் பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of