‘தம்’ கேட்டு தகராறு..! சிறையில் நடிகைகள் செய்யும் அலப்பறைகள்..!

724

சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு, சினிமா உலகில் அதிகப்படியான போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டு வருகிறது.

இதுதொடர்பான வழக்கில், முதலில் கன்னட சினிமாவை சேர்ந்த நடிகை ராஹினி திவேதி கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்ததாக நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டார்.

இவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதையடுத்து, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, நடிகைகள் இரண்டு பேரும் சிறை காவலர்களிடையே, சிகரெட் கேட்டு தகராறு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சிகரெட் இல்லாமல் நடிகைகள் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.